அரசியல்தமிழ்நாடு

வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக எம்.எல்.ஏ பதிவு நீக்கம்- சர்ச்சையை தொடர்ந்து பேஸ்புக் அதிரடி!

வன்முறையை தூண்டும் விதமாக கருத்து பதிவிட்டதால் தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களை பா.ஜ.க கட்டுப்படுத்துவதாக எழுந்த புகார் அதிர்வலையை ஏற்படுத்தியது. முகநூலில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசும் பா.ஜ.கவினரின் கருத்துக்களை தடை செய்ய இந்திய அதிகாரி தடையாக இருந்ததாவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய அதிகாரியிடம் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில பேஸ்புக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்கின் கணக்கு முடக்கப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதால் ராஜா சிங்கின் முகநூல் கணக்கு கடந்த 2018-ம் ஆண்டு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

3 Comments

  1. Hello, i think that i saw you visited my site so i came to “return the favor”.I am attempting to find things to enhance my site!I suppose its ok to use some of your ideas!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button