இந்தியாஉத்தரபிரதேசம்

காசு இல்லையா? பிறந்த குழந்தையை விற்று காசை கொடு! அதிர்ச்சி அளித்த மருத்துவமனை நிர்வாகம்

பிரசவத்திற்கு சென்ற பெண்ணிடம் மருத்துவ கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையையே வாங்கி கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் வசிப்பவர் சிவ் சரண். ரிக்‌ஷா வண்டி ஓட்டுநராக இருக்கும் இவரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அந்த மருத்துவமனையிலேயே அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்கான மருத்துவச் செலவாக ரூ.35 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதை கேட்ட சிவ் சரண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட மருத்துவமனை நிர்வாகம் காசு இல்லாவிட்டால் குழந்தையை கொடுங்கள். அதை விற்றுத் தருகிறோம் என சிவ் சரணிடம் கூறியுள்ளனர். வேறு வழி இல்லாததால் சிவ் சரணும் அவரின் மனைவியும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதன் படி மருத்துவமனை நிர்வாகமும் குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்று மருத்துவமனை கட்டணம் போக மீதம் ரூ.65 ஆயிரத்தை சிவ் சரணுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரவத் தொடங்கியதும் இது பற்றி அறிந்த காவல் துறையினர் மருத்துவமனை மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரிக்கையில் அந்த மருத்துவமனையின் உரிமம் ஐந்து ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த குழந்தையை யாருக்கு விற்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Articles

8 Comments

  1. Good V I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs and related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your client to communicate. Excellent task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button