உலகம்வைரல்

பெண்ணின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட 4 அடி பாம்பு! (வீடியோ இணைப்பு)

ரஷியாவின் உள்ள தகெஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் வழக்கம் போல வீட்டின் முன் உறங்கியுள்ளார். அப்போது அவர் வயிற்றில் ஏதோ ஒன்று நெளிவதை உணர்ந்துள்ளார். முதலில் அதை கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து வயிற்றில் நெளியவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிருடன் ஏதோ ஒரு உயிரினம் உள்ளே இருப்பதை உறுதி செய்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு என்டோஸ்கோப்பி உதவியுடன் அதை வெளியேற்ற முடிவு செய்தனர். பின்னர் பெண்ணின் வயிற்றுக்குள் எண்டோஸ்கோப்பி கருவியை உள்ளே செலுத்தி, அந்த உயிரினத்தை பிடித்து வெளியே இழுத்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து 4 அடி நீளம் கொண்ட பாம்பு வந்துள்ளது. இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட அந்த வீடியோ வைரஸ் ஆகி வருகிறது.

 

பெண்ணின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட 4 அடி பாம்பு!ரஷ்யாவில், ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெண், வீடு வாசலில்…

Posted by Malai Murasu on Wednesday, September 2, 2020

அந்த பாம்பு எப்படி அந்த இளம்பெண்ணின் வயிற்றுக்குள் சென்றது என அந்த பெண்ணுக்கே தெரியவில்லை. அவர் எப்போதும் வீட்டின் முன் திறந்த வெளியில் தூங்குவது வழக்கம். அப்போது அந்த பாம்பு அவர் வாய் வழியே வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடீயோவை பார்த்த அனைவருக்கும் நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதே உண்மை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button