இந்தியா

ரபேல் விமானங்களுக்காக கட்டுப்படுத்தப்படும் புறாக்களின் இனபெருக்கம்!

இந்திய விமான படை மிகவும் பழமையாக மாறி விட்டதால் இந்திய விமானப்படைக்காக பிரான்சிடம் இருந்து விமானங்கள் வாங்க முந்தைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்தது. அதன் பின் பாஜக அரசு வந்தபின் முதல் கட்டமாக வாங்கப்பட்ட அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அம்பாலா விமானப்படை தளத்தில் கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்பகுதியில் சுற்றித் திரியும் புறாக்களால் ரஃபேல் போர் விமானங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட கூடும் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் அதிகப்படியான புறாக்கள் காரணமாக விமான இறக்கையிலோ விமான இன்ஜினிலோ அடிபட்டால் அது விமானங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புறாக்களின் இனபெருக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி திட்ட அலுவலர் அனில் ராணா அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button