இந்தியாஉலகம்கவர் ஸ்டோரிபொழுதுபோக்கு

இந்தியாவில் பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு தடை- மத்திய அரசு அதிரடி

அண்மையில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் இறையாண்மைக்கும், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதாக கூறி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 28 ஆம் தேதி தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டுள்ள இந்த செயலிகள் பிளே ஸ்டோர், ஐ.ஓ.எஸ். பதிவிறக்கம் தளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டன.

அதேநேரத்தில், சீன செயலிகளுக்கான மாற்று செயலிகள் தயாரிப்பில் இந்திய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனிடையே கடந்த ஜூலை மாதம்,  நாட்டின் இறையாண்மையை கருத்தில் கொண்டு மேலும் 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தச் செயலிகள் அனைத்தும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த சீன செயலிகளின், குளோனிங் போல் செயல்பட்டவை என்று இந்தியா குற்றம் சாட்டியது. வரும் நாட்களில் மேலும் 250 செயலிகளுக்கு தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில். நாட்டின் இறையாண்மைக்கும், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதாக கூறி பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம், லூடோ உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இதனால் பல கோடி இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த சீன நிறுவனங்களுக்கு இது பேரிடியாகும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

9 Comments

  1. What¦s Happening i am new to this, I stumbled upon this I’ve discovered It absolutely helpful and it has aided me out loads. I am hoping to contribute & assist other customers like its aided me. Good job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button