இந்தியாகன்னியாகுமரிகிரைம்

தாய், தந்தை, மகள் படுகொலை செய்த வழக்கு – 6 ஆண்டுக்கு பின் குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் ராஜீவ் நகரில் சுப்பையா(57) – வசந்தி (52) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அபிஸ்ரீ (13) என்ற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். சுப்பையா, திருநெல்வேலியில் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர். கடந்த 2014 டிசம்பர் 20 ஆம் தேதி வீட்டுத் தோட்டத்தில் வசந்தியும், அபிஸ்ரீயும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். சுப்பையா முப்பந்தல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், 2015ம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சுப்பையாவின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்த மெரின் ராஜேந்திரன் என்பவர் தான் 3 பேரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மெரின் ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உதவியாக இருந்த சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவந்தனர். ஆனால், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதால், சுரேஷ் தொடர்பான விபரங்களை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், வெளிநாட்டிலிருந்து சுரேஷ் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது சுரேஷை வருவதை கண்ட போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து கொலை சம்பவம் தொடர்பாக அவரிடம் ரகசியமாக விசாரித்து வருகிறது சிபிசிஐடி போலீஸ்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button