விளையாட்டு

சென்னை அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விருப்பம்- தோனியுடனான சர்ச்சை பற்றி ரெய்னா விளக்கம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அண்மையில் அறிவித்த சுரேஷ் ரய்னா, சென்னை அணி சாரிபில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமிகரத்துக்கு சென்றார். ஆனால் திடீரென அவர் நாடு திரும்பினார். ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் குழப்பம் நிலவியது. தனது உறவினர் ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் தான் ஐபி எல் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்பியதாக ரெய்னா விளக்கமளித்தார்.

ஆனால் தோனி உடனான மோதல் தான், ரெய்னா, ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறக் காரணம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் ரெய்னாவுக்கு அளிக்க ஹோட்டல் அறை தொடர்பாக, மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட அறையில், பால்கனி உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை என்றும், தோனிக்கு வழங்கப்பட்டதைப் போன்று தமக்கு அறை வழங்க வேண்டும் என ரெய்னா கேட்டதாகவும் இதனால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதை தொடர்ந்து சி.எஸ்.கே. அணியின் உரிமையாளரான சீனிவாசன் கூறுகையில் ‘சிலருக்கு வெற்றி போதை தலைக்கேறி விட்டால் இப்படி நடக்கும். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் 11 கோடி வருமானத்தை இழந்ததற்காக ரெய்னா வருந்துவார். விளையாடியே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் இல்லையென்றால் வெளியேறி போய் விடலாம். தோனி அவ்வபோது வீரர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிகிறார். எந்த சூழலையும் சமாளிக்க தயாராய் உள்ளார்’ என கூறியுள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் அணியுடனான கருத்து மோதல் காரணமாகவே அவர் வெளியேறியுள்ளது உறுதியானது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரெய்னா, தோனியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்றும் தனக்கு சகோதரர் போன்றவர் எனவும் கூறியுள்ளார். சி.எஸ்.கே அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணருவதாக கூறியுள்ள ரய்னா, சென்னை அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button