கிரைம்கோவைதமிழ்நாடு

கோவையில் ஒன்றரை வயது குழந்தை மற்றும் தாய் தூக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியைச் சேர்ந்த கதிவரன் – தமிழ்ச்செல்வி(26) தம்பதியருக்கு கடந்த 2018 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயது யாசவி என்ற பெண் குழந்தை உள்ளது. கதிரவன் விவசாய வேலை செய்து வருகிறார். தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயிற்று வலியும் இருந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்ச்செல்வி சின்ன விஷயங்களுக்கு கூட எல்லோரிடமும் சண்டைபோட்டு கோபித்துக் கொள்வது வழக்கம். இதனிடையே நேற்று உடுமலைப்பேட்டையில் உள்ள தனது அம்மா கனகமணிக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் கனகமணி,  தனது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்துள்ளனர் .

அப்போது வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டதால், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தபோது, தமிழ்ச் செல்வியும் குழந்தை யாசவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button