Uncategorizedவிளையாட்டு

பேட்டை தொடவே பயமாக இருக்கிறது! உலகின் நம்பர் ஒன் வீரர் கோலியே இப்படி சொல்ல காரணம் என்ன?

கொரோனா காரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா? நடைபெறாதா? என்கிற கேள்வி எழுந்தது. அதை தொடர்ந்து பி.சி.சி.ஐ தலைவர் கங்குலியின் முயற்சிக்கு பின் இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இப்பொது அனைத்து அணிகளும் துபாய் சென்று விட்ட நிலையில், அங்கு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சக வீரர்களுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘5 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பேட்டை எடுத்துள்ளேன். வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது, கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட முதலாவது வலைபயிற்சி சிறப்பாகவே இருந்தது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் வலுவான உடல்தகுதியுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

இதனால் இன்றைய பயிற்சியின் போது பெரிய அளவில் சிரமம் ஏதும் இல்லை. நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. முறையான உடற்பயிற்சி இல்லாமல் வந்திருந்தால் உடலை எளிதாக அசைத்து ஆடுவது கடினமாக இருந்திருக்கும். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் நாளில் நன்றாக பந்து வீசினர். பந்தை சரியான பகுதியில் ‘பிட்ச்’ செய்து நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட்டனர். ஒட்டுமொத்தத்தில் எங்களது பயிற்சி முகாம் நன்றாக தொடங்கியிருக்கிறது’ என்றார்.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button