கிரைம்தமிழ்நாடுதிருச்சி

திருச்சி புதுமணப்பெண் கொலையில் புதிய திருப்பம் – மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி  வாழவந்திபுரம் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோயா பைப் நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகிறார். அருள்ராஜுக்கு, லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைத் சேர்ந்த திரவியராஜ் பிரகாசி தம்பதியின் பட்டதாரி மகள் கிருஷ்டி ஹெலன்ராணிக்கும் நிச்சயம் செய்யப்பட்டு, கடந்த  10 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

வாளவந்தபுரம் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்த புதுமணத் தம்பதியினருக்கு இடையே, நல்ல புரிதல் இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று அதிகாலை இயற்கை உபாதைகளை கழிக்க தனியாக சென்ற கிருஷ்டி ஹெலன்ராணி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கரையோரத்தில் அவர் சடலமாக கிடந்துள்ளார். ஹெலன்ராணி அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தன.

இதனையடுத்து, கொள்ளிடம் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  கைரேகை நிபுணர்களும், ஸ்பார்க் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாம்பத்திய உறவுக்கு வராததால் மனைவியை கொலை செய்தாக அவர் ஒப்புக்கொண்டார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, மனைவியின் நகைகளை எடுத்து சென்றதாகவும், ஆடைகளை கலைத்து கற்பழித்தது போன்று நிர்வணமாக்கி கொலை செய்ததாகவும் அருள்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணமாகி 40 நாட்களுக்குள் புது மணப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button