இந்தியாகவர் ஸ்டோரிடெல்லிமற்றவை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பிரசாந்த் பூஷனுக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருச்சக்கர வாகனத்தில் சென்றதை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்திருந்தார். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் பற்றியும் ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தனர்.

மேலும், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்பாரெனில் அவரை வழக்கிலிருந்து விடுக்க நீதிபதிகள் மூன்று நாள் கால அவகாசம் வழங்கினார். ஆப்போது அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அவரை எச்சரிக்கையுடன் மன்னித்துவிடலாம் என கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இரண்டு முறை அவகாசம் அளித்தும் மன்னிப்பு கேட்க மறுத்து தனது நிலைப்பாட்டில் பிரசாந்த் பூஷண் உறுதியாக இருந்துள்ளார்.

 

இந்தநிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ.1 அபராதம் செலுத்தவில்லை என்றால், 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  6 மாதம் சிறை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் ரூ.1 அபராதம் விதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

8 Comments

 1. Thank you for every other informative website. Where else may I am
  getting that type of information written in such an ideal method?
  I have a venture that I’m simply now operating on, and I have been at
  the look out for such information.

  My page :: LinnieWDolle

 2. What i tend not to understood is actually how you happen to be will no longer actually a lot more well-favored than you could possibly be now.
  You’re very intelligent. You recognize therefore significantly with regards
  to this subject, produced me personally believe it from
  numerous varied angles. Its like individuals aren’t
  fascinated except it is something to accomplish with Woman gaga!
  Your individual stuffs great. At all times look
  after it!

  Have a look at my web blog :: bullet journal dot grid notebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button