தமிழ்நாடுநீலகிரி

தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு செல்ல மட்டும் இ-பாஸ் கட்டாயம்- ஆட்சியர் அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதன்மூலம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இ-பாஸ் கொடுக்க லஞ்சம் வாங்கப்படுகிறது என்றும், அவசரமாக விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இ-பாஸ் முறையை நீக்கவேண்டும் என்று மத்திய அரசும் உத்தரவிட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்துசெய்யப்படுகிறது என்று முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாவட்டத்துக்குள் வர கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும். நீலகிரியில் இருந்து பிற மாவட்டத்துக்கு இ-பாஸ் இன்றி செல்லலாம். நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகளை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button