அரசியல்தமிழ்நாடு

என்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை தாக்கி பேசியுள்ள அனுமன் சேனா தலைவர்

சில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சிவனடியார் சரவணன் குடும்பத்தினரும் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து அந்த ஊருக்கு சென்ற ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் சாமியாரின் ஊர் மக்கள் சாமியார் வெளியிட்ட வீடியோ பொய் எனக் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆவேசமான அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன் என்பவர் நான் தமிழ்நாடு முழுக்க சுற்றியவன். என்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார். அந்த அளவு செய்தவன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

வீடியோவை காண இங்கே அழுத்தவும்: 

 

தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் கைது!

 

கோவை அருகே காரமடையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பல்சர் வாகனத்தைச் சோதனை செய்ததில் அது திருட்டு வாகனம் என்பதை உறுதி செய்தனர். உடனே அந்த வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தான் தெரிந்தது அவர்கள் இதற்கு முன் பல குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது கடந்த ஜூன் மாதத்தில் காரமடை அருகே உள்ள கெம்பனூர் கிராமத்தில் அனிதா என்ற பள்ளி ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, தங்கத் தாலி, தங்க வளையல், தங்கக் கம்மல் போன்றவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவலும் வெளிவந்தது.

அதோடு இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்ற போன்ற குற்றச்சம்பவங்கள் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

6-வது புருஷன் தான் வேணும் என அடம்பிடித்த மனைவி – 5 கணவர்கள் கண்ணீர்

கர்நாடக மாநிலம் சிக்மக்ளூர் மாவட்டம், கம்பினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (22). இவர் பிரியா(38) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், தங்கள் காதலுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருப்பதுடன், இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என  காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்போது காவல் நிலையத்திற்கு திடீரென வந்த 5 பேர், சந்துரு கூட்டிக்கொண்டு வந்தது தங்கள் மனைவி என்று கூறியதால், போலீசார் செய்வது தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் 5 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பசவராஜ், கிரண், ரமேஷ், துக்காராம் மற்றும் இன்னொரு இளைஞர் என 5 பேரும், சிக்மக்ளூர் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை 5 பேரையும் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியா, சில காலம் குடும்பமும் நடத்தியுள்ளார். அதில் 2 பேருக்கு அவர் குழந்தையும் பெற்றுள்ளார். பின்னர் தலைமறைவான பிரியா, தற்போது 6வது ஆக சந்துரு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, பிரியாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், 5 பேரையும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், சில காலம் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவானதையும் ஒப்புக் கொண்டார். தற்போது 6வது ஆக சந்துருவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் மட்டுமே வாழ விரும்புவதாகவும் பிரியா கூறியுள்ளார். இதனை ஏற்காத மற்ற 5 கணவர்களும், பிரியாதான் வேண்டும் என போலீஸ் நிலையத்தில் அடம் பிடித்துள்ளனர். இதை கேட்ட போலீசார், 5 கணவர்களையும் விவாகரத்து செய்யாமல் சந்துருவை திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் பிரியா மீது வழக்கு பதிவு செய்தனர்.

5 பேரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண், கடைசியில் 6-வது கணவருடன் தான் வாழ்வேன் என காவல்நிலையத்தில் ஒரு பெண் அடம்பிடிந்த சம்பவம், நடிகர் வடிவேலு காமெடியாக நடித்த மருதமலை திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button