விளையாட்டு

ஐ.பி.எல் தொடரிலிருந்து ரெய்னா வெளியேற காரணம் தோனியா? இருவருக்கும் மோதலா?

ஐ.பி.எல். தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறுவதற்கு, தோனியுடனான மோதல் தான் காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே. அணியின் துணை கேப்டனாக உள்ள சுரேஷ் ரெய்னா, அண்மையில் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறினார். இது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரெய்னாவின் உறவினர் கொலை செய்யப்பட்டதே அவர் நாடு திரும்பியதற்கு காரணம் என கூறப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை தெளிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தோனி உடனான மோதல் தான், ரெய்னா, ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறக் காரணம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் ரெய்னாவுக்கு அளிக்க ஹோட்டல் அறை தொடர்பாக, மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட அறையில், பால்கனி உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை என்றும், தோனிக்கு வழங்கப்பட்டதைப் போன்று தமக்கு அறை வழங்க வேண்டும் என ரெய்னா கேட்டதாகவும் இதனால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.எஸ்.கே. அணியின் உரிமையாளரான சீனிவாசன் பேசியுள்ள கருத்தும் இதை உறுதி செய்கின்றன. அவர் கூறுகையில் ‘சிலருக்கு வெற்றி போதை தலைக்கேறி விட்டால் இப்படி நடக்கும். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் 11 கோடி வருமானத்தை இழந்ததற்காக ரெய்னா வருந்துவார். விளையாடியே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் இல்லையென்றால் வெளியேறி போய் விடலாம். தோனி அவ்வபோது வீரர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிகிறார். எந்த சூழலையும் சமாளிக்க தயாராய் உள்ளார்’ என கூறியுள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் அணியுடனான கருத்து மோதல் காரணமாகவே அவர் வெளியேறியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button