இந்தியாகிரைம்

கணவனை கொடூரமாக கொலை செய்து பெட்ரூமில் புதைத்த கொரோனா பாதிக்கப்பட்ட மனைவி!

குடும்பத்தகராறு காரணமாக கணவனை தலையில் அடித்துக்கொன்று,படுக்கையறையின் தரையில் பெண் ஒருவர் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள தலாய் மாவட்டத்தை சேர்ந்த காந்தசெரா கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சித் ரீங் (30), இவரது மனைவி பாரதி ரீங். இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீர் என்று சஞ்சித் ரீங் காணாமல் போய் உள்ளார். இதனால் சஞ்சித் ரீங்கை காணவில்லை என்று அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது சஞ்சித் ரீங்கின் மனைவியான பாரதி ரீங் மீது சந்தேகம் வலுத்துள்ளது. எனவே அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது அவர் தன் கணவரை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதி ரீங் தனது கணவரின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில் மயக்கமடைந்த அவர் சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார். கணவனை இறந்ததை அடுத்து, அவரது உடலை பெட்ரூமில் குழிதோண்டி மனைவி புதைத்துவிட்டார். அந்தப் பெண் கணவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாரதி ரீங்கை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அவர் தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button