கிரைம்தமிழ்நாடுதிருச்சி

காலைக்கடன்களை கழிக்க சென்ற புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி  வாழவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ரவி. இவருடைய மகன் அருள்ராஜ் (28) ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோயா பைப் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனிடையே லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைத் சேர்ந்த திரவியராஜ் பிரகாசி தம்பதியின் மகள் கிருஷ்டி ஹெலன்ராணிக்கும் அருள்ராஜூக்கும் கடந்த 10 ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்த புதுமணத் தம்பதியினர், வாளவந்தபுரம் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். திருமணம் ஆன சில ஆன நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே நல்ல புரிதல் இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இயற்கை உபாதைகளை கழிக்க தனியாக சென்ற கிருஷ்டி ஹெலன்ராணி வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, கணவர் அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்த போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கரையோரத்தில் உடலில் எவ்வித துணியுமின்றி கிருஷ்டி ஹெலன்ராணி சடலமாக கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி உள்ளது. இதுதொர்பாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கிடந்த இடத்தில், கைரேகை நிபுணர்களும், ஸ்பார்க் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் நேரில் ஆய்வு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.

Related Articles

9 Comments

  1. Howdy! This article couldn’t be written any better! Checking out this article
    reminds me of my previous roommate! He continually kept speaking about this.
    I’ll forward this post to him. Fairly certain he’ll have got
    a good read. I appreciate you for sharing!

    my website – RudyPBicek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button