கிரைம்தமிழ்நாடுதிருப்பத்தூர்

காதலிப்பதாக பள்ளி மாணவியை சீரழித்த கல்லூரி மாணவர்! அவமானத்தால் மாணவி தற்கொலை!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா(17). இவர் அந்த பகுதியில் உள்ள ஜங்களாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராகுல்காந்தி (20). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். ராகுல்காந்தி திவ்யாவை காதலிப்பதாக தொடர்ந்து கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு சென்ற மாணவி திவ்யா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர். அப்போது ராகுல்காந்தியின் நண்பரான ஜீவா என்பவரது வீட்டில் மாணவி திவ்யாவை ராகுல்காந்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை மாணவியை தேடி வந்தவர்களிடம் சிலர் கூறியுள்ளனர். இதனால் இந்த சம்பவம் பற்றி சுற்றுவட்டாரத்தில் தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மாணவியை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ராகுல் காந்தி, ஜீவா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button