கிரைம்தமிழ்நாடுராமநாதபுரம்

ஒன்றரை வயது குழந்தையை எரித்து கொன்ற தந்தை – போதையில் வெறிச்செயல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை நாகநாதர் கோயில் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி(26). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மரியா அவிஸ்டானை, முனியசாமி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபினேஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.  மீன் வியாபரம் செய்து வரும் முனியசாமி, ஓய்வு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநராகவும் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே கடந்த 28 ஆம் தேதி மனைவி மரியா அவிஸ்டாவின் தங்கைக்கு அக்காள் மடத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக சென்ற இடத்தில் முனுசாமிக்கும், அவிஸ்டானைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி, குழந்தையை தன்னிடம் தருமாறு மரியா அவிஸ்டாவிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை தாக்கிவிட்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு முனியசாமி  ஊர் திரும்பியுள்ளார்.

இதனையடுத்து, வேதாளை சமத்துவபுரத்தில் உள்ள பங்கில் பெட்ரோல் வாங்கிகொண்டு, அங்குள்ள திறந்தவெளி பகுதிக்கு குழந்தையுடன் அவன் சென்றுள்ளான். பின்னர் ஈவு இரங்கமின்றி பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்று, பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளான் முனியசாமி.

இதனை தொடர்ந்து புதுவலசை தாவு காடு பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு முனியசாமி சென்றுள்ளார். அவரிடம் குழந்தை இல்லாததால், இதுகுறித்து அண்ணி மரிய அவிஸ்டாவிடம் அவர் போனில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மரிய அவிஸ்டாவின், கணவர் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

முனியசாமியிடம் விசாரணை நடத்தியதில், குழந்தையை எரித்து கொன்றதை ஒப்புக்கொன்றார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தந்தையே, ஒன்றரை வயது குழந்தையை எரித்துக் கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button