அரசியல்இந்தியா

ரஷ்யாவில் நடக்கும் ராணுவப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகல்! காரணம் என்ன?

தெற்கு ரஷ்யாவின் கவ்காஸ் நகரில் ராணுவ பலம் அதிகம் கொண்ட பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ராணுவ பயிற்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சீனா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ராணுவ பயிற்சியில் பங்கேற்க இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது.
இதனிடையே இந்திய வீரர்கள் பயிற்சியில் பங்கேற்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ராணுவ பயிற்சியில் பங்கேற்பதில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது.

ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ராணுவ பயிற்சியில் பாகிஸ்தான், சீனா
நாடுகள் பங்கேற்க உள்ளதால், பயிற்சியில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ளது.சீனா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட மாட்டார்கள் என ரஷ்ய அரசிடம், மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக 200 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் ரஷ்யா செல்ல இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button