விளையாட்டு

ஐ.பி.எல் தொடரை விட்டு நாடு திரும்பும் ரெய்னா! காரணம் என்ன?

உறவினர் கொலை செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில் உள்ள தரியல் கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ் ரெய்னாவின் மாமனாரை கொள்ளைக்காரர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்கியதுடன், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் காரணமாக சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்பினார். ரெய்னா சென்னை அணியில் இருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

7 Comments

 1. Awesome blog! Do you have any suggestions for aspiring
  writers? I’m planning to begin my own blog soon but I’m a little bit lost on everything.
  Can you recommend starting with a free platform like WordPress or get a paid
  option? There are numerous options out there that I’m completely confused ..
  Any recommendations? Thanks a whole lot!

  my web page; JinnyCDowden

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button