கிரைம்தமிழ்நாடுதிண்டுக்கல்

காதலன் வேறொரு பெண்ணுடன் திருமணம் – காதலி பெட்ரோல் ஊற்றி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த ஆடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுல். இவருடைய மகள் மாலதிக்கு (32), 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவரை பிரிந்து கடந்த  5 வருடமாக தந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில், 8 வயது ஆண் குழந்தையுடன், கே.சி. பட்டி கிராமத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார் மாலதி.

இதனிடையே, கே.சி.பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஸ்(26) என்வருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளளது. நாளடைவில் இவர்கள் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். தாலி கட்டாமல் வாழ்ந்த இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், மாலதி  வேறு சாதி என்பதால், சதீஸ் பெற்றோர் அவரை திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சதீஸ் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார்.

இதனை அறிந்த மாலதி, சதீஸ் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  பின்னர், தன்னை ஏமாற்றிய சதீஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி தாண்டிக்குடி காவல் நிலையம் முன்பு திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி  மாலதி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பரவி, அவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார் .

அருகில் இருப்பவர்கள் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தற்கொலைக்கு தூண்ட முயன்றதாக 306 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சதீஸை கே.சி. பட்டி போலீசார் தேடி வருகின்றனர் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கே.சி. பட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button