அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலைக்கு பதவி – அதிரடியாக நியமித்தது பா.ஜ.க.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். இவரது அதிரடி பணியை பாராட்டி கர்நாடக மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தனர். இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணாமலை அரசியலில் ஈடுபடப்போவதாகவும், ரஜினிகாந்த் தொடங்கப்போகும் கட்சியில் முதல்வர்  வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் பரவலாக பேசப்பட்டது.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜனதாவில் சேர்ந்தார்

இதனிடையே, கடந்த 26 ஆம் தேதி, அண்ணாமலை திடீரென பாஜகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் வரவேற்றார். தமிழ்நாட்டில் தேசிய உணர்வை கொண்டு வருவதற்காக தனது நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணிப்பதாகவும், எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் சேர்ந்ததாக அவர் கூறினார்.

இந்தநிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜகவின் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். மேலும் தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

8 Comments

 1. It is actually the best a chance to make some plans in the future and
  it can be a chance to be at liberty. We have read this post and
  in case I could possibly I want to suggest you few interesting things or suggestions.
  Perhaps you can write next articles discussing this informative article.
  I wish to read much more things about it!

  Look into my blog post; LouUMasino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button