தமிழ்நாடுதிருச்சிபொழுதுபோக்கு

நித்தியானந்தாவின் கைலாசா நாடு குறித்து விளம்பர பதாகைகள் – மணப்பாறையில் பரபரப்பு

கொலை, பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சில சீடர்களுடன் தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் தனி தீவில் கைலாயம் என்ற பெயரில் இந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை அமைத்துள்ளதாகவும், தன்னை பற்றி தெரிந்துக்கொள்ள விக்கிப்பீடியா போல  நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறியிருந்தார். அதோடு கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், கைலாசா குறித்த விளம்பர பதாகைகளை வைத்து வாலிபர் பட்டாளம் அசத்தியுள்ளனர்.

அந்த பதாகையில் “பல வருசமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க…” என்றும் “கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்யானந்தா எங்க…” என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன. இதுமட்டுமின்றி “நோ சூடு” நோ சொரனை” என்ற நித்யானந்தாவின் தாரக மந்திரமும், கடைசியாக “கைலாச செல்ல இருக்கும் நண்பர்கள்” என்று குறிப்பிட்டு அனைவரின் படங்களையும் அந்த விளம்பர பதாகையில் வைத்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட நித்தியானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பதாகைகள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Articles

12 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button