கிரைம்தமிழ்நாடு

காதலித்த பெண்ணின் அம்மாவுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய பள்ளி மாணவன்! வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

சென்னையில் 41 வயது பெண் ஒருவருக்கு திடீர் என்று ஒரு நம்பரில் இருந்து செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் குமரன்நகர் காவல்நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள் சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் ஆபாச புகைப்படங்கள் வந்த நம்பர் யாருடையது என்பதை கண்டறிய முயன்றனர். அப்போது அந்த நம்பர் ஒரு பள்ளி மாணவனுடையது என்று தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த மாணவனின் முகவரியை அறிந்து அவனை பிடித்து விசாரிக்கும் போது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தது.

அந்த மாணவன் கூறிய தகவலின் படி அந்த மாணவனும் அந்த 41 வயது பெண்ணின் மகளும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அந்த பெண்ணின் மகளுடன் நட்பாக பேசிவந்த அந்த மாணவன் பின் அவரை ஒருதலையாக காதலிக்க தொடங்கியுள்ளான். இதை அவளுடன் கூறியபோது அதை அந்த பெண் தனது தாயாரிடம் கூறியுள்ளாள். உடனே அவரின் தாயார் அந்த மாணவருடன் பேசுவதை தவிர்க்குமாறு தனது மகளிடம் கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் இந்த மாணவனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் அந்த மாணவியின் பெற்றோர் எண்ணை இணையத்தில் பதிவேற்றி, அவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு மாணவியின் அம்மா கொடுத்த புகாரின்பேரில் மாணவன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 56, 570, மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354D மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button