அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

அதிமுக ஆட்சியை விமர்சித்த அண்ணாமலை! அதிமுகவை எதிர்க்கிறதா பாஜக?

2011ம் பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் பணிபுரிந்தார். பின்னர் இயற்கை விவசாயத்தில் இறங்கப்போவதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடந்து தேர்தலில் களமிறங்கப்போவதாகவும் கூறினார்.

அதை தொடர்ந்து டெல்லியில் முரளிதர்ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை நேற்று கோவை பாஜக அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாலர்களுக்கு பேட்டி அளித்த அவர் திராவிட கட்சிகளை விமர்சித்திருந்தார். அப்போது கூறிய அண்ணாமலை “கடந்த 20 வருடமாக தமிழகத்தில் வளர்ச்சி நின்று விட்டது. வளர்ச்சியில் செல்ல வேண்டிய மாநிலத்தின் வளர்ச்சியை நிறுத்தி விட்டார்கள். திராவிட ஆட்சி வரும்முன் காங்கிரஸ் ஆட்சியில் தமிழகம் வளர்ந்த நிலையில் தான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியபடி பார்த்தால் கடந்த 20 வருடத்தில் தமிழகத்தை 15 ஆண்டுகள் ஆண்டது அதிமுக தான். மீதம் இருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியில் இருந்தது. அவர் கூறிய 20 ஆண்டில் சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். தமிழகத்தில் கூட்டணிக்காக பாஜக தலைவர்கள் காத்து கிடந்ததும் ஜெயலலிதா வீட்டின் முன் தான். அதோடு தற்போது தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது.

இப்படி இருக்கையில் அவர் விமர்சனம் நேரடியாக அதிமுக வை தாக்குவது போல தான் இருக்கிறது. ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் ஆண்மையுள்ள அரசு என்ற கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதோடு விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இரு கட்சிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. பாஜகவில் இணைந்த துரைசாமி தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என அறிவித்து சர்ச்சையை கிளப்பினார். பின் நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாஜக தலைவர்களின் இது போன்ற கருத்துக்கள் அதிமுகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு தன் தலைமையில் கூட்டணியை உருவாக்குகிறதோ என்று கேள்வியை எழுப்பியுள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button