தமிழ்நாடுதிருச்சி

தமிழகத்தை பிரித்து திருச்சியை தலைமையிடமாக அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு! மக்கள் மகிழ்ச்சி!

நாட்டிலுள்ள பழமையான நினைவு சின்னங்கள் மற்றும் பாரம்பரியம் மற்றும் புராதனச் சின்னங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 29 தொல்லியல் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வட்டத்தில் 403 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே வட்டத்தினால் நிர்வகிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொல்லியல் சின்னங்களை முழுமையாக ஆய்வு செய்ய முடியாமலும், பாதுகாக்க முடியாத நிலையிலும் இருந்தது.

எனவே தமிழகத்தை இரண்டாக பிரித்து புதிதாக தொல்லியல் வட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிதாக தொல்லியல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய தொல்லியல் வட்டம் உருவாக்கப்படுவதாக மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்தியா முழுவதும் 7 புதிய தொல்லியல் வட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

இதுகுறித்து எம்.பி சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சியை மையமாகக் கொண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தனி வட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று, திருச்சி சர்க்கிள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக இத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் தென் மாவட்டங்களில் உள்ள புராதன கோயில்கள் மற்றும் இத்துறையின் வாயிலாக பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களும் பாதுகாக்கப்படவும், புனரமைக்கப்படவும், புதிய ஆய்வுகள் மேற்கொள்ளவும், கூடுதலாக நிதி பெறவும், புதிய பணிகள் தொடங்கவும், விரைந்து நடைபெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய தொல்லியல் வட்டம் அறிவிக்கப்பட்டதால் தெற்கு மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் இருக்கும் புராதன சின்னங்களை பராமரிக்கவும் புதிய ஆய்வுகள் செய்யவும் ஏற்ற சூழ்நிலை இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது..

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button