தமிழ்நாடு

பெண்ணுடன் நிர்வாண பூஜை செய்து சிக்கிக்கொண்ட சிவனடியார்! காவல்துறை விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

சேலம் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கியதில் சிவனடியார் இறந்தார் என கூறப்பட்டு வந்த நிலையில் குற்றம் சாட்டிய குடும்பத்தினர் நிவாரணம் பெற பொய் கூறியதாக தெரிவித்து காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சிவனடியார் சரவணன் குடும்பத்தினரும் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

சாமியார் வெளியிட்ட வீடியோ: https://www.facebook.com/watch/?v=623585654968793&extid=t2LJuCvU5FNfggN1

இதனையடுத்து ஹிந்து அமைப்புகள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதை தொடர்ந்து டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் துறைரீதியான விசாரணை நடத்த எஸ்பி தீபா காணிக்கர் உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனத் தெரியவந்துள்ளது. அந்த விசாரணையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குண்டாங்கல்காட்டை சேர்ந்தவர் சரவணன் (40). சாமியாரான இவர், ஐந்தாண்டுக்கு மேலாக தாயத்து கட்டுவது, பேய் விரட்டுவது, நிர்வாண பூஜை செய்வது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டார். கடந்த 14ம் தேதி சரவணன் ஒரு பெண்ணுடன் மது அருந்தி குத்தாட்டத்தில் ஈடுபடுவதாக,கிடைத்த தகவலின்படி தேவூர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். போதையில் இருந்த சாமியார் அந்த பெண்ணுக்கு நிர்வாண பூஜை நடத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்துள்ளார். இதனால் தன் குட்டு வெளிவந்ததால் சாமியார் வீடியோ வெளியிட்டு சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.

இதை பயன்படுத்தி கொண்ட சிலர், காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக குற்றம் சாட்டினால் அரசிடம் நிவாரண தொகை கிடைக்கும் என சாமியாரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அதை நம்பி அவர்களும் அதை கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவ்ர்களிடம் நடத்திய விசாரணையில் நிவாரணம் பெற ஆசைப்பட்டதால் பொய் தகவல் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களின் இந்த வாக்குமூலத்தை கடிதமாக காவல்துறையினர் பெற்றுள்ளனர்

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button