கல்விதமிழ்நாடுதிண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் பள்ளி மாணவன் கண்டுபிடித்த புதிய செயலியை பிளே ஸ்டோரில் வெளியிட்டது கூகுள் – வாட்ஸ் அப்பை விட அதிக வசதிகள் கொண்டது

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆர்வத்தில் இருந்த பிரனேஷ், வாட்ஸ் அப் செயலி போன்று ஜெட் லைவ் சாட் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியை கூகுள் நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவனின் இந்த புதிய செயலிக்கு நேற்று கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. இந்த ஜெட் லைவ் சாட் செயலியை,  ப்ளே ஸ்டோரில் இருந்து தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய செயலி வாட்ஸ் அப் செயலியை விட அதிக வசதிகள் கொண்டுள்ளதாகவும், நாம் அனுப்பும் தகவல், அறிமுகமில்லாத நபர் யாரும் பார்க்க முடியாது வகையில் இருப்பதாகவும் மாணவன் பிரனேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், வாட்ஸ்அப் செயலியில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும்.
ஆனால் இந்த புதிய செயலி மூலம் ஒரு தகவலை ஒரே நேரத்தில் பதினைந்து நபர்களுக்கு அனுப்பலாம். இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த புதிய ஜெட் லைவ் சாட் செயலி பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் செய்துள்ள இந்த புதிய சாதனைக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் செல்போன், டிவி என மூழ்கி தங்களது நேரத்தை வீணடித்து வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவரின் இந்த சாதனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button