இந்தியாஉத்தரபிரதேசம்கிரைம்

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று சடலத்தை குளத்தில் வீசிய கொடூரம்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இரு நாளுக்கு முன் ஒரு விண்ணப்பத்தை நிரப்பி அருகிலுள்ள அரசு அலுவகத்தில் கொடுக்க அந்தச் சிறுமி சென்றுள்ளார். மாலை வரை சிறுமி வீட்டிற்கு வராததால் பயமடைந்த அவர் குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். ஆனால் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் காவல்துறையில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் சிறுமியை தேடிய போது கிராமத்தின் அருகில் உள்ள ஒரு குளத்தின் அருகில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் சுதந்திர தினம் அன்று 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button