கிரைம்தமிழ்நாடுராமநாதபுரம்

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து 9 மாத கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து 9 மாத கர்ப்பமாக்கிய இளைஞனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிறிஸ்துவ தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மகன் ஸ்டீபன் ராஜ் (27). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். அதே தெருவைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் மருது – ராக்கச்சி தம்பதியரின் மகள் அபிநயா (15). இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீபன்ராஜும், அபிநயாவும் அடுத்தடுத்த வீட்டில் இருப்பதால் ஸ்டீபனின் அம்மாவைப் பார்க்க அபிநயா அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இந்த சந்தர்ப்பத்தை ஸ்டீபன் ராஜ் பயன்படுத்திக்கொண்டு ஒருநாள் அபிநயா வீட்டிற்கு வரும்பொழுது அபிநயாவை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, இதனை தனது போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஸ்டீபன் ராஜ். பின் அதை வைத்து கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அபிநயாவை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் இதை வெளியே கூறினால் விடீயோவை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அபிநயாவை பள்ளிக்கு செல்ல விடாமல் தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதி மற்றும் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிநயாவின் வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அபிநயாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அபிநயா 9 மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரியவந்தது. இது பற்றி அபிநயாவிடம் கேட்கும் போது நடந்த விவரத்தை பெற்றோரிடம் அபிநயா தெரிவித்துள்ளார். உடனே அபிநயாவின் பெற்றோர்கள் ஸ்டீபன்ராஜிடம் இந்த விபரத்தை பற்றி கேட்ட பொழுது குடும்பத்துடன் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ஸ்டீபன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் மற்றும் வலுக்கட்டாயமாக சிறுமியை கற்பழித்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button