கிரைம்தமிழ்நாடுநீலகிரிமற்றவை

நீலகிரியில் அண்ணன், தங்கை பாசப் போராட்டம் – சடலமாக மீட்கப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா  வடமூலை பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது 22 வயது மகள் சுகன்யா, பயன்பாடற்ற சுமார் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அண்ணன் தமிழ் அழகனும், சித்தப்பா சத்தியசீலனும் கிணற்றுக்குள் குதித்து சுகன்யாவைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் மூவரும் கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டனர்.

உயிருக்குப் போராடிய அவர்களை மீட்க, அப்பகுதி மக்கள் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், கிணற்றுக்குள் இருப்பவர்களை மீட்க முயன்றனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின், மூன்று பேரையும் சடலமாக மட்டுமே மீட்க முடிந்த சம்பவம், மீட்புக் குழுவினரை நிலைகுலையச் செய்தது.

இச்சம்பவம் குறித்து தேவாலா போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.  உடல்கள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அண்ணன், தங்கை, மற்றும் சித்தப்பா என மூவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button