அரசியல்இந்தியாகவர் ஸ்டோரிகேரளா

கேரள தலைமைச்செயலகத்தில் தீ விபத்து – தங்க கடத்தல் வழக்கு ஆவணங்களை எரிக்க முயற்சி

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச்செயலக கட்டத்தின் பொது நிர்வாகத் துறை அமைந்துள்ள பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தலைமை நெறிமுறை அதிகாரி அலுவலகத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் சில கோப்புகள், பத்திரங்கள், கணிப்பொறி உள்ளிட்டவை எரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், விருந்தினர் மாளிகை அறை பதிவு செய்வது தொடர்பான கோப்புகள் மட்டுமே எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்கசிவால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய கோப்புகளை ஒப்படைக்குமாறு தேசிய விசாரணை முகமை கேட்டிருந்த நிலையில். ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே இந்த தீ விபத்து நாடகத்தை நடத்தி இருப்பதாகவும், இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மற்றம் பாஜக குற்றச்சாட்டின. மேலும்,  தலைமை செயலகம் முன் இரண்டு கட்சிகளும் தர்ணா போராட்டம் நடத்தின. அப்போது பாஜகவினர் சிலர் தலைமைச் செயலகத்திற்குள் உள்ளே திடீரென நுழைய முற்பட்டபோது, போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி வேலை நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றச்சாட்டினார். மேலும், முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button