அரசியல்இந்தியா

மகள் கண் முன்னே டிவி சேனல் நிருபர் சுடப்பட்டார்!

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபத்தில் மேலும் ஒரு பத்திரிகையாளர், மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபத்தில் மேலும் ஒரு பத்திரிகையாளர், மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பத்திரிகையாளரை சுட்டுக்கொள்ளும் சம்பவம் அதிகரித்த கொண்டே வருகிறது. கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது குழந்தைகள் முன்னிலையிலேயே மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தீவிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் ரத்தன் சிங் என்ற செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். பாலியா மாவட்டத்தில் பெஃபெனா எனும் பகுதியில் அவரது வீடடில் வைத்து இரு மகள்கள் கண்ணெதிரிலேயே அந்த நிருபர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button