அரசியல்சென்னைதமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் திமுக கற்பூரம் போல் கரைந்து வருகிறது – அமைச்சர் விமர்சனம்

சென்னை இராயபுரம் பகுதியில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ஏழை எளிய மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்தை வைத்து, கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தும் விதமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார். கூட்டணி கட்சிகளின் முரண்பாடுகள் பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே இருந்து வருகிறது.

அனைவரையும் ஒருங்கிணைந்து செல்லும் நோக்குடன் அதிமுக இருக்கிறது. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஜெயலலிதா காலத்தில் எப்படி இருந்ததோ அதே போல் அதிமுக தற்போது இயங்கி வருகிறது. வரும் காலத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றார். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்குகளை பெறுவதற்காகவே உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் விநாயகர் சிலை போஸ்ட் செய்துள்ளார். நடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. மதநல்லிணக்கம் மட்டுமே அதிமுகவின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார். மேலும், தன்னுடன் இருப்பவர்களை கூட ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாதவர் ஸ்டாலின். அவரது செயல்பாடுகளால் திமுக கற்பூரம் போல கரைந்து கொண்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button