தமிழ்நாடுவைரல்

நான் ஒரு கன்னடன்; பாஜகவில் இணையவிருக்கும் நிலையில் வைரல் ஆகும் அண்ணாமலையின் பேச்சு!

நான் பெருமைமிகு கன்னடன் என்று பேசிய அண்ணாமலையின் பேச்சி கன்னட மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது காவல்துறை சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் பேசிய அண்ணாமலை, ” நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் எல்லோரும் எனது ரசிகர் என்று கூறினீர்கள். ஆனால் நான் உங்களின் சகோதரன். நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடர். பிறந்தது தமிழ் நாடாக இருந்தாலும் முதல் முறையாக கர்நாடகா வந்தபோது, தமிழ்நாட்டில் ஒரு 300 பேருக்கு என்னை பற்றி தெரிந்திருக்கும். அதுவும், பள்ளியில் படித்தவர்கள், கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள். அவ்வளவுதான்.

ஆனால், கர்நாடகா வந்தபிறகு எனது பணி திறமையை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள். தமிழகத்தை சேர்ந்தவர் என்று நீங்கள் பார்க்கவில்லை. காவிரி பிரச்சினை வந்தபோது என்னை வேறு நபராக நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் என்னை தமிழனாக பார்க்கவில்லை. அண்ணாமலை என்ற போலீஸ் அதிகாரியாகத்தான் பார்த்தீர்கள். எனது மாநிலத்தில் கூட இந்த அளவுக்கு மரியாதை கொடுத்திருப்பார்களா என்றால் இருக்காது என்றுதான் நினைக்கிறேன். உயிர் இருக்கும்வரை கன்னடன் எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன் எனப் பேசியுள்ளார்.

அண்ணாமலை இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வந்த நிலையில் இவரின் இந்த பேச்சி கன்னட மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Articles

10 Comments

 1. Hello there! This post couldn’t be written far better!
  Taking a look at this post reminds me of my previous
  roommate! He constantly kept referring to this. I am going to send this information to him.
  Fairly certain he’s planning to have a great read.
  I appreciate you for sharing!

  my web page LucasEFitten

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button