தமிழ்நாடுதிருவண்ணாமலை

வெளிநாட்டில் செட்டில் ஆக அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியார்!

அமெரிக்க பெண்ணை திருமணம் செய்ய நினைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியார் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலைக்கு மனஅமைதிக்காக உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் வருவார்கள். அப்படி வருபவர்கள் அங்கு சில மாதம் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்குவார்கள். அப்படியே அமெரிக்கா நாட்டை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் அங்கு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் தங்கி இருந்த வீட்டுக்கு திடீரென்று வந்த சாமியார் ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் தன்னை பாதுகாக்க அந்த பெண்ணும் சாமியாரை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கத்தியை எடுத்து சாமியாரை தாக்கி கூச்சலிட்டுள்ளார் அந்த பெண். இந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் அங்கு வந்து அந்த பெண்ணை மீட்டு சாமியாரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதை தொடர்ந்து தலையில் காயமடைந்த அந்த அமெரிக்க பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த சாமியாரை கைது செய்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில், அந்த சாமியார் கோவை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்று தெரியவந்தது. அவர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது பெயர் மணிகண்டன் (34). நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமம்தான் எனது சொந்த ஊர். தந்தை பெயர் மாதேஸ்வரன். திருவண்ணாமலை வந்த நான், அமெரிக்க பெண்ணை பார்த்தவுடன் காதலில் விழுந்தேன். அவரை மயக்கி திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தேன். சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால், அவருக்கு தற்காப்பு கலைகள் தெரிந்துள்ளது. அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, என்னை கடுமையாக தாக்கியதோடு, தலையில் அரிவாளால் வெட்டினார். நிலைகுலைந்து நான் கீழே விழுந்துவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, சாமியார் மணிகண்டனை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். வெளிநாட்டு பெண்ணை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

9 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button