உலகம்தமிழ்நாடு

நிந்தியானந்தாவிற்கு கடிதம் எழுதிய மதுரை ஓட்டல் அதிபருக்கு சிக்கல் – வழக்கறிஞரின் புகாரால் பரபரப்பு

பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சில சீடர்களுடன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டார். அண்மையில் வாடிகன் வங்கியை அடிப்படையாகக் கொண்டு கைலாசா ரிசர்வ் வங்கி தொடங்க உள்ளதாகவும், இதற்கான பணம் அச்சடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாகவும் நித்தியானந்தா அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த 22 ஆம் தேதி அன்று கைலாசா நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டார். அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ணா முத்ரா, புஷ்ப முத்ரா என்றும் பெயர் வைத்துள்ளார். இந்த காசுகளை பயன்படுத்தி 56 நாடுகளுடன் வியாபாரம் செய்ய இருப்பதாகவும் நித்தியானந்தா அறிவித்திருந்தார்.

இதனிடையே, நேற்று வீடியோ ஒன்றை இணையதளத்தில் நித்தியானந்தா வெளியிட்டார். அதில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், கைலாசாவில் தொழில் தொடங்க கோரிக்கை விடுத்த மதுரை ஓட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சி ஜவுளிக்கடை அதிபர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், கைலாசவில் தொழில் தொடங்குவது தொடர்பாக நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதிய மதுரை ஓட்டல் அதிபர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதில் அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button