தமிழ்நாடு

விமானம் மூலம் ஒரே நாளில் சென்னை வந்த 625 வெளிமாநிலத்தவர் – காரணம் என்ன ?

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால், வெளி மாநில தொழிலாளர்கள் விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கட்டுமான வேலைகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கின. இதனால் வருமானம் இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றனர். பின்னர் அரசு சார்பில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. இதன் மூலமும் பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றனர்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்களை சார்ந்து இருக்கும் கட்டுமான தொழில்கள் முடங்கின. மேலும் அவர்களை நம்பி இருக்கும் சிறு தொழில்களும் முடங்கின . இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததையடுத்து, கடந்த ஒரு வாரமாக வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விமானங்கள் மூலம் 625 பேர் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மீண்டும் தொழில்கள் தொடங்கும் என்றே தெரிகிறது.

Related Articles

10 Comments

  1. certainly like your web site but you need to check the spelling on several of your posts. Several of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth nevertheless I will surely come back again.

  2. It’s a pity you don’t have a donate button! I’d definitely donate to this superb blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to brand new updates and will talk about this site with my Facebook group. Chat soon!

  3. Good day! This post could not be written any better! Reading through this post reminds me of my good old room mate! He always kept chatting about this. I will forward this write-up to him. Fairly certain he will have a good read. Many thanks for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button