தமிழ்நாடுதிருவள்ளூர்மாவட்டம்வைரல்

லாரியின் சக்கரத்தில் சிக்கி 2 இளைஞர்கள் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னையை அடுத்த அம்பத்தூர் ஒரகடம் ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), கால்பந்து வீரரான செல்வா (15) ஆகியோர் செங்குன்றம் – அம்பத்தூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரகடம் அருகே நாயுடு ஹால் துணிக்கடைக்கு எதிரே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லாரியின் முன் சக்கரத்தில் விழுந்த இரண்டு இளைஞர்களும், இழுத்துச் செல்லப்பட்டு பின் சக்கரத்தில் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மற்றொருவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது, பாதி வழியில் அந்த இளைஞரும் உயிரிழந்தார்.

இளைஞர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக, பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய எம் சாண்ட் ஏற்றிவந்த வாகனம் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இளைஞர்களின் இரு சக்கர வாகனம் லாரியில் இழுத்து செல்லப்பட்டு பின் சக்கரம் ஏறி நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button