உலகம்கிரைம்

நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி எண்கவுண்ரில் சுட்டுக்கொலை – கொழும்புவில் பதற்றம்

இலங்கையில், கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என பல்வேறு வழக்குகளின் தொடர்புடைய குற்றவாளியாக வலம் வந்தவர் தான் அங்கொட லொக்கா. இவர், கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக் கொண்டவர். இலங்கையில் நடந்த கேங் ஸ்டார் வாரில், எதிராளிகள் 7 பேரை கொன்றுவிட்டு அங்கொட லொக்கா இந்தியா தப்பிவந்து விட்டார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அங்கொட லொக்கா, பின் சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இவருக்கு வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கொட லொக்காவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்து கோவை போலீஸாரின் கோரிக்கையை அடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கை விசாரணை நடத்தினர்.

இதனிடையே, அங்கொட லொக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள லொக்காவின் கூட்டாளிகள் இந்தத் தகவலை போலீஸாரிடம் கூறியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அங்கொட லொக்கா மர்ம மரணம் தொடர்பாக, அவரது இலங்கை காதலி, மதுரை பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மூன்று பேரை கோவை போலீஸார் கைது செய்தனர் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொழும்பு பகுதியில் பதுங்கியிருந்த அங்கோட லங்காவின் மற்றொரு கூட்டாளியை எண்கவுண்டரில் போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர். ரவுடியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்புவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button