அரசியல்இந்தியா

பாஜகவுக்கும் முகநூல் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்- சிபிஐ(எம்) செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

பாஜகவுக்கும் முகநூல் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டது. அதில் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் பேசும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை என்றும் ஆளும்கட்சிகளுக்கு பேஸ்புக் சாதகமாக நடக்கிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தது. இந்த கட்டுரை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, “இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.”என்று தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது பற்றி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி “பாஜகவுக்கும் முகநூல் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை முகநூல் நிறுவனம் அரசுதுறை அல்லது தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகளுடன் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button