இந்தியாஉலகம்

உலக பணக்காரர் பட்டியலில் சறுக்கியுள்ள அம்பானி- காரணம் என்ன ?

சொத்து மதிப்பு கூடினாலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி இந்த வாரம் சறுக்கியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆசியாவின் மிக பெரிய கோடீஸ்வரர்களின் ஒருவரான அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா காலத்தில் மிக பெரிய அளவில் உயர்ந்தது. அதிலும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக அவரது நிறுவனத்தின் பங்கு மதிப்பும் பெரிய அளவில் உயர்ந்தது. மேலும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால் அவர் தனது நிறுவனத்தை கடனற்ற நிறுவனமாகவும் மாற்றினார்.

இதனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் 75 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்துக்கு அம்பானி முன்னேறியிருந்தார். கடந்த இரண்டு வாரத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு 78.3 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தாலும் பங்குச் சந்தை சக்கரவர்த்தி வாரென் பஃபெட் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் தங்களது சொத்து மதிப்பை உயர்த்தியதால் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

78.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் ஆறாவது இடத்திலும், 79.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வாரென் பஃபெட் ஐந்தாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 190 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் 114 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

Related Articles

14 Comments

  1. I¦ll right away snatch your rss feed as I can’t in finding your e-mail subscription link or newsletter service. Do you’ve any? Kindly allow me realize in order that I may subscribe. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button