அரசியல்இந்தியா

ராகுல் காந்தி விமர்சனம் எதிரொலி; வன்முறை, வெறுப்புணர்வு பதிவுகளுக்கு தடை! – பேஸ்புக் அறிவிப்பு

முகநூலிலில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டுவிதமான பதிவுகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் அரசியல் வெற்றிக்கு பேஸ்புக் முக்கிய பங்காற்றி வருவதாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு கட்சியின் வெற்றிக்காக பேஸ்புக் நிறுவனம் ஒற்றை சார்பு கொள்கை கொண்டிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. மேலும் இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களை பா.ஜ.க தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனம் குற்றஞ்சாட்டி இருந்தது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும்விதமான பதிவுகளுக்கு தடை விதிப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் எந்தவித அரசியல் நிலைப்பாடுகளும் இன்றி இந்த கொள்கை கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பேஸ்புக் பதிவுகள் மிக நுட்பமாக கண்காணிப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

10 Comments

  1. You actually make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complex and very broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button