அரசியல்தமிழ்நாடு

நோட்டாவை வென்றாலே பாஜகவினருக்கு இன்னோவா கார் கிடைக்கும் – காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கினால் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக தருவார் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.

மேலும், பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும் எல்.முருகன் அறிவித்தார். இவரின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் பேசும்பொருளானது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜகவினர் எப்போதும் நோட்டா வுடன் தான் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக எங்கேயாவது நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றால், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக தருவார் போல் தெரிகிறது என கூறினார்.

Related Articles

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button