அரசியல்இந்தியாஉத்தரபிரதேசம்

சொந்தமாக நிலம் வாங்கியதால் தலித் கிராமத் தலைவர் சுட்டுக்கொலை ! அதை தொடர்ந்து மூண்ட பெரும் கலவரம் !

உத்தரப்பிரதேசத்தில் தலித் பிரிவை சேர்ந்த கிராமத்தலைவர் ஆதிக்கசாதியை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் பன்ஸ்கான் என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் சுமார் 300 தலித் குடும்பங்களும், 30 ஆதிக்கசாதி குடும்பங்களும் வசித்து வந்தது. அந்த கிராமத்தின் தலைவராக இருந்தவர் சத்யமே ஜெயதே. தலித் பிரிவை சேர்ந்த இவர் அந்த பகுதியில் செல்வாக்கு பெற்ற நபராக இருந்துள்ளார். இவருக்கும் ஆதிக்கசாதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பகுதியின் தலித் மக்களின் குரலாகவும் சத்யமே ஜெயதே இருந்துள்ளார்.

இந்நிலையில் சத்யமே ஜெயதேவை அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்கசாதியை சேர்ந்த சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் சிக்கி குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளது. உடனே தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, மூத்த காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவத்தை கட்டுப்படுத்த அந்த இடத்தில் பலத்த போலீஸ் படையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்தைப் பற்றி சுட்டுக்கொல்லப்பட்ட சத்யமே ஜெயதேவின் மனைவி கூறும்போது, “வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் உயர்சாதியை சேர்ந்த சிலர் தங்கள் வீட்டிற்கு வந்து, என் கணவரை மோட்டார் சைக்கிளில் அருகிலுள்ள குளத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் அவரை சுட்டுக் கொன்றார்கள். ” என கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பற்றி சத்யமே ஜெயதேவின் உறவினர் ஒருவர் கூறும்போது, “தலித் மக்கள் இப்போது படித்து நல்ல நிலையில் இருப்பது இங்குள்ள ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கு பிடிப்பதில்லை. என் மாமா நன்றாக படித்து கடும் உழைப்பின் மூலம் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துள்ளார். அவர்கள் என் மாமாவை சுட்டு கொல்ல காரணம் இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். மேலும் மாநில அரசு சார்பில் உயிரிழந்த சத்யமே ஜெயதே மற்றும் கலவரத்தில் கொல்லப்பட்ட குழந்தை ஆகியோருக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

One Comment

  1. There is a limit to tolerate such crime. Now people may take the rules in their hands and act against those upper caste criminals if the Govt. do not take necessary action. Every human in the world have the right to buy land and pursue their livelihood. These intolerable upper caste criminals still in the 21st century try to put the other caste people under enslavement is objectionable and offensive.
    people of other communities unite together and oppose all sinister designs of upper caste people and isolate them if necessary.
    These kinds of killings have been continuing since many centuries. So Atrocities in the name of caste and creed should not be allowed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button