சென்னைதமிழ்நாடுமருத்துவம்

ரூ.5 மருத்துவம் பார்த்த டாக்டர் மாரடைப்பால் காலமானார் – சென்னை மக்கள் வேதனை

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பை 1973-ம் ஆண்டு நிறைவு செய்த திருவேங்கடம் வீரராகவன், தொடக்கத்தில் ரூ.2 மருத்துவம் பார்த்து வந்தார். பின்னர் கடந்த 40 ஆண்டுகளாக எருக்கஞ்சேரியிலும் வியாசர்பாடியிலும் ஏழைகளுக்காக மருத்துவர் பார்த்து வந்த அவர், தமது நோயாளிகளிடம் ரூ5 மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார்.  அப்பகுதி மக்களின் பெரும் மதிப்புக்குரியவராக திகழ்ந்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவன், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது.

இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு, அவர் நள்ளிரவில் காலமானார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர். அவர் மறைவுச்செய்தி அறிந்து வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மெர்சல் திரைப்படத்தில் ரூ.5 மருத்துவராக விஜய் நடித்தது திருவேங்கடத்தை முன்மாதிரியாக கொண்டதுதான் என சொல்லப்படுகிறது. இவர் கடந்த மார்ச் மாதம் வரை செல்போன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்திருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

 

Related Articles

8 Comments

  1. You are my aspiration, I own few web logs and occasionally run out from post :). “Follow your inclinations with due regard to the policeman round the corner.” by W. Somerset Maugham.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button