அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழகத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சியை சார்பில் போட்டியிடும் கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் தான் கமலா ஹாரீஸ் குடும்பத்தினரின் பூர்வீக கிராமம். 4 தெருக்களை கொண்ட இந்த கிராமத்தில் தான் கமலாவின் தாத்தா பி.வி. கோபாலன் பிறந்தார். அங்குள்ள தர்மசாஸ்தா சேவகப்பெருமாள் கோயில் தான் அவரது குலத் தெய்வ கோயில் ஆகும்.  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளது,  அந்த மாவட்ட மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் முந்தைய எம்.பி. மற்றும் தலைமை வழக்கறிஞர் தேர்தல்களில் போட்டியிட்ட  போது, தன் வெற்றி பெற வேண்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடைக்கும் படி அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில், முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் கமலா ஹாரீஸ், கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் பதவி வகித்தவர். இவர், 2016-ல் அம்மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கும் தேர்வானார். தற்போது ஜனநாயகக் கட்சியின் முக்கிய முகமாக மாறியுள்ளார். நாட்டின் மிகச்சிறந்த மக்கள் சேவகர்களில் ஒருவர் கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

2 வயதில் அமெரிக்க சென்ற கமலா ஹரிஸ், அவருடைய தாய் இறந்தபின் அஸ்தியை கரைப்பதற்காக சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரைக்கு வந்ததாக, அவரது தாய் மாமா கோபால் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ் தெரியாவிட்டாலும், வீட்டில் பேசும் தமிழை புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்,  அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Articles

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button