அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

தேசத்தின் கௌரவமாக 17 ஆண்டுகளாக கர்வத்துடன் அணிந்து வரும் நானா தேசியக் கொடியை அவமதித்தேன்? – எஸ்.வி.சேகர் ஆவேசம்

தமிழகத்தில் உள்ள சிலைகள் மீது காவி நிறம் பூசி களங்கம் படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதலளிக்கும் வகையில் நடிகரும்,  பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,  காவியை களங்கம் என்று கூறும் தமிழக முதல்வர், தேசிய கொடியில் உள்ள காவியை மட்டும் வெட்டிவிட்டு ஆகஸ்டு 15ல் கொடியை ஏற்றுவாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும் என்றும் அவர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இதனையடுத்து,  நாட்டின் கண்ணியத்திற்கு ஊறு விளைவித்தது தொடர்பாக, எஸ்.வி.சேகரை தேசிய கவுரவ பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார்  நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில், தேசியக் கொடியை என் தாய்க்கு மேலாக, தேசத்தின் கௌரவமான விஷயமாக 17 ஆண்டுகளாக பெருமையுடன், கர்வத்துடன் அணிந்து வருகிறேன் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,  தேசியக் கொடி இல்லாமல் நான் வெளியே வருவது இல்லை என்றும், எந்த ஒரு காலகட்டத்திலும் அதை அவமதிக்கும் விஷயத்தை நான் செய்யவே மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் நான் இந்தியனாகப் பிறந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும்,  அவமதித்தேன் என்று கூறுவது தவறான புரிதலாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.  கொடியில் உள்ள ஆரஞ்சு இந்துக்கள், வெள்ளை கிறிஸ்தவர்கள், பச்சை  முஸ்லிம்கள் என்றும் மூன்று பேரும் ஒன்றாக இருப்பதுதான் தேசியக் கொடி, மற்ற சின்ன சின்ன மதங்கள் எல்லாம் சக்கரத்துக்குள் உள்ளது என பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுத்தாகவும்  எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பெருமையே வேற்றுமையில் ஒற்றுமைதான் என்றும், தேசிய கொடி கீழே கிடந்தால்,  யார் காலில் படக்கூடாது என்பதற்காக அதை எடுத்து வைத்துக்கொள்பவன் நான் என்று அந்த வீடியோவில் உற்சாகமாக எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button