தமிழ்நாடுராமநாதபுரம்

எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 5 சிறுமிகள் – இப்படியும் ஒரு காரணமா?!

தாயார் திட்டியதால் கோபமடைந்த சிறுமி எலி பேஸ்ட் ஜூசில் கலந்து குடித்து தன்னுடைய நான்கு தோழிகளுக்கும் கொடுத்ததால் உயிருக்குப் போராடி சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த ‘கட்டாலங்குளம்’ கிராமத்தில், ஆர்த்தி பாண்டிச்செல்வி சுபிக்க்ஷா உள்ளிட்ட 5 சிறுமிகள் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது நிவேதாவின் தாயார் நிவேதாவை திட்டியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த நிவேதா எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து தானும் குடித்து, தன்னுடைய தோழிகள் நாலு பேருக்கும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button