கவர் ஸ்டோரிசினிமாசென்னைதமிழ்நாடு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்

கொரோனா வைரஸ், சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது.  நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இதேபோல், இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே,  பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் பொறுத்தி அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  கொரோனா பாதித்தவர்களுக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக நிதி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

7 Comments

  1. I precisely desired to say thanks yet again. I’m not certain the things I would have sorted out without these tips and hints documented by you concerning such a theme. This was a real terrifying circumstance in my opinion, however , coming across the specialised style you handled that forced me to cry with gladness. I am just happier for this service and as well , trust you comprehend what an amazing job you were carrying out teaching people today through the use of your websites. Most likely you haven’t come across any of us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button